மூட்டு வலியால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திலுள்ள தாகூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் தன்னுடைய நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி கல்யாணிக்கு கடந்த பத்து வருடங்களாக மூட்டுவலி இருந்துள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றுரும் குணம் அடையாததால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் கல்யாணி வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் பெருமாள் வீடு திரும்பியபோது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கல்யாணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.