பெரம்பலூரில் குடி பழக்கத்தை தாய் கண்டித்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரமணி என்ற மகன் இருந்தார். சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி, மகன் வீரமணியுடன் வசித்து வந்தார். வீரமணி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி வீட்டுக்கு மது அருந்தி வந்துள்ளார். அதனை அவரது தாய் மோசமாக கண்டித்து திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த வீரமணி சென்ற சனிக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர்திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வீரமணி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வீரமணியின் தங்கை சந்தியா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.