Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு தீராத நோய் உள்ளது… லாரி டிரைவரின் முடிவு… கதறி அழும் மனைவி…!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தனசீலன். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறது. தற்போது இவருடைய மனைவி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனசீலன் தனது வீட்டின் கதவை தாழிட்டுகொண்டு தன்மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வீட்டின் மேல் கூரை வழியாக புகை வெளியே வந்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது கதவு உள்புறமாக தாழிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து கொண்டு உள்ளே இறங்கி பார்த்தபோது அங்கு தனசீலன் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் கலைத்துறையினர் அவருடைய வீட்டில் ஆய்வில் நடத்தியபோது தனசீலன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் அவர் தனது மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு எழுத தொடங்கியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு தீராத நோய் உள்ளது. அது யாருக்கும் பாதிக்க கூடாது என்ற காரணத்தினால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். என்னால் நீண்ட காலம் உயிரோடு இருக்க முடியாது. மேலும் எனக்கு சேரவேண்டிய சொத்துக்கள் அனைத்தும் என் மனைவியிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாக அதில் எழுதியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |