Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னால அவரோட போராட முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏரவாஞ்சேரி பகுதியில் சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் புனிதாவிற்கும், சோமுவிற்க்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புனிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் புனிதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின் இந்த தற்கொலை குறித்து உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |