சலவைத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சலவைத் தொழிலாளியான சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சங்கரநாராயணன் மது அருந்திவிட்டு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து கரூர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.