ஈராக்கின் பாக்தாத் நகரில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள பிரபல தயாரான் சதுக்கத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு தற்கொலை வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 28 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் அதிகமான மக்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு பேர் தங்களின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
https://www.youtube.com/watch?v=wxCNgJUqbjM&feature=youtu.be