விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் தவபாண்டி என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த அறையின் கதவை நீண்டநேரம் திறக்காத காரணத்தால் உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் கதவைத் தட்டி உள்ளனர். ஆனால் அவர் வெளியே வராத காரணத்தால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.
அப்போது தவ பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரின் தந்தை பாண்டி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.