Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதலிக்கு கத்தி குத்து… தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… திருச்சியில் பரபரப்பு…!!

காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதன் பின் மணிகண்டனுடன் பழகுவதை அந்த மாணவி கடந்த சில மாதங்களாக தவிர்த்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உறையூரில் இருக்கும் மாணவியின் வீட்டிற்கு மாலையில் சென்ற மணிகண்டன் அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபம் அடைந்த மணிகண்டன் மாணவியின் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே தனது காதில் விஷத்தை ஊற்றி கொண்டு மணிகண்டன் மயங்கி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டனையும், அந்த மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனுக்கும், அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |