Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இருக்கும் கணவன்…. விஷம் குடித்த மனைவியும் பிள்ளைகளும்…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் ஒரு பிள்ளை மட்டும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அத்திவெட்டி கிராமம் பெரியசாமியின் சொந்த ஊராகும். இவருடைய மனைவி தமிழரசி மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகள் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பெரியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி அவருடைய இரண்டு பிள்ளைகளுடன் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பெரியசாமியின் ஒரு பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து தமிழரசிக்கும் மற்றொரு பிள்ளைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |