பிக்பாஸ் வீட்டின் விதிகளை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்ட மதுமிதா அந்நிறுவனத்திடம் பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா சக போட்டியாளர்களிடம் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தனது கையை வெட்டிக் கொண்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் விதிமுறைகளை மதுமிதா மீறியதாகக் கூறி, அவரை பிக்பாஸ் நிறுவனம் வீட்டை விட்டு வெளியேற்றியது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரிடம் பிக்பாஸ் நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தின் படி பேசிய சம்பளத்தை பிக்பாஸ் நிறுவனம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா பேசிய பணத்தை தரவில்லையானால் தற்கொலை முயற்சி மேற்கொள்வேன் என்று பிக்பாஸ் நிறுவனத்திடம் மிரட்டியுள்ளார்.
இதன்பின் கிண்டி காவல் நிலையத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுவனம் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் மதுமிதா மீது புகார் அளித்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் வேளையில் மதுமிதா மறு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை அந்நிறுவனம் தராமலே ஏமாற்றுவதாகவும் இதனை சட்ட ரீதியில் தான் சந்திக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.