உடல் கருகிய நிலையில் மாணவி மீட்கப்பட்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அய்யஞ்சேரியில் தமிழ் ஆசிரியரான கமலதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கும் ஸ்ரீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனு என்ற மகள் உள்ளார். இவர் 12 ம் வகுப்பு முடித்துவிட்டதால் கடந்த 12-ஆம் தேதி ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வினை எழுதியுள்ளார். இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் இருந்த அனு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று உடல் கருகிய நிலையில் அனுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ நுழைவு தேர்வின் பயத்தினால் பள்ளிமாணவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.