Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தற்கொலை என்று நினைத்தோம்…. திராவகம் ஊற்றி எரித்தனர்… பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… புகாரளித்த பொதுமக்கள்…!!

தீக்குளித்து இறந்ததாக கூறப்படும் பெண்ணின் உடலில் திராவகம் ஊற்றி எரிக்கப்பட்டதாக கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் இரட்டை இலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக ஏற்கனவே சண்டை நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பெயரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாலக்கோடு போலீசாருக்கு பைரவி திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாசில்தார் ராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் பைரவி மீது திராவகம் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டதாக கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என போலீசார் அளித்த வாக்குறுதியின் பின்பு பொதுமக்கள் கலைந்தனர். அதன் பின் பைரவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |