வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மகள் தந்தை தற்கொலை செய்துகொண்டனர்.
கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி. பாத்திர தொழிலாளியான பாவாடைசாமியின் மகள் சங்கீதா புதுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு மனம் முடித்து கொடுத்துள்ளார் பாவாடை சாமி. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே சங்கீதாவின் கணவர் ராஜேஷ் மேலும் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது..
இதனை அடுத்து தந்தை வீட்டிற்கு வந்துள்ளார் சங்கீதா பின்னர் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ராஜேஷின் உறவினர்கள் ராஜேஷுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பாவாடைசாமி மற்றும் சங்கீதா விஷம் குடித்து மயங்கி உள்ளனர்.
இருவரையும் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற பாவாடைசாமியின் மகன்கள் முதலுதவி கொடுத்த பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள்பாவாடைசாமியும் சங்கீதாவும் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்களா? வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விரைந்து விசாரித்து வருகின்றனர்.