உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சேசப்ப நாயுடு கொட்டாய் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலக்கோடு செல்லும் சாலை பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் மனமுடைந்த சின்னசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.