சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சிந்தி பேட்டை அருகில் உள்ள அண்ணா சாலை மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கூவத்தில் திடீரென்று குதித்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்மற்றும் தீயணைப்பு துறைக்கு .தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலத்திலிருந்து ஏணி மூலம் குளத்தில் இறங்கி தேடினார்கள்.
சேறும் சகதியும் இருந்ததால் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் சடலமாக இளம்பெண்ணை மீட்டனர். இதையடுத்து சிந்திப்பேட்டை காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம் பெண் யார் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.