முக்கூடல் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள இலந்தகுளம் கிராமத்தில் வசிப்பவர் செல்வம் என்ற செல்வராஜ். 30வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நீண்ட நாளாக தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவரின் பெற்றோர் செல்வராஜிற்கு பல பகுதிகளில் பெண் பார்த்தனர். ஆனால் அவருக்கு எந்த பகுதியிலும் பெண் கிடைக்கவில்லை. இதனால் மகனுக்கும், பெற்றோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது விரக்தியான செல்வராஜ் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். அவரின் பெற்றோர் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்தும் திறக்காததால், சிறிது நேரத்திற்கு பிறகு கதவை திறந்து பார்த்தபோது செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மகனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை புஸ்பராஜ் முக்கூடல் போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.