மது குடித்ததால் மனைவியிடம் தகராறு ஏற்பட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செப்பேடு கிராமத்தில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்த மாடுகளை விற்று மதுபானம் வாங்கி குடித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த முருகன் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு முருகனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.