என் சாவுக்கு வீட்டின் உரிமையாளரே காரணம் என கடிதம் எழுதிவைத்து தையல்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகில் பரணிபுத்மர் பகுதியை அடுத்து சீனிவாசா நகரில் உள்ள திலகாவுக்கு சொந்தமான வீட்டில் டேவிட்ராஜ் என்பவர் வாடகைக்கு குடி இருந்தார் . 47 வயதான இவர் தையல்காரராக இருந்தார். திலகா தொடர்ச்சியாக டேவிட்ராஜ் வீட்டிற்கு சென்று ஊர் கதைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதை டேவிட்ராஜின் தாய் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை தொடரந்ததால் வீட்டை காலி செய்யும்படி திலகா கூறியுள்ளார்.
இதனையடுத்து மனமுடைந்த டேவிட்ராஜ் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது மரணத்திற்கு முழு காரணமும் என் வீட்டின் உரிமையாளர் என ஒரு கடிதத்தில் தெரிவித்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு செய்துள்ளார். இதை கண்ட அவரது உறவினர்களும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் டேவிட்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.