Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரியாணிக்காக தற்கொலை – தொடரும் அவலம்…!!

சிறுமி ஒருவர் தனது அம்மா பிரியாணி செய்து தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகே குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தன்னுடைய பாட்டியிடம் புத்தாண்டு அன்று பிரியாணி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அவருடைய தாயார் செய்து தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரியாணிக்காக சிறுமி தற்கொலை கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தற்கொலை செய்து கொள்ளும் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனையை அளித்துள்ளது. இதற்கு முன்னதாக பேரன் ஒருவர் தன்னுடைய பாட்டி பிரியாணி தராததால் பாட்டியை அடித்துக் கொன்ற சம்பவமும் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரியாணிக்காக கொலைகளும் தற்கொலைகளும் நிகழ்வது அதிகரித்து வருகின்றது.

Categories

Tech |