Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெளியே போன மகனை காணும்…. பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை….!!

வேப்பமரத்தில் வாலிபர் பிணமாக தொங்கியதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டியை சார்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகன் ஆனந்த் என்பவர் கடந்த 1 ஆம் தேதி வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் இரவு  வீட்டிற்கு வரவில்லை. பின்னர் மறுநாள் காலை நந்தகுமார் என்பவர் சின்னதுரையிடம் வந்து ஆனந்த் பண்ணை குட்டையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்குவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து ஆனந்தின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ஆனந்த் பிணமாக தொங்குவதை கண்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |