கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தில் அயோத்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான மணி பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தினமும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மணி பாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மணி பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.