குடும்பத் தகராறின் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாரீஸ்வரி என்ற காதல் மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் முனியாண்டி – மாரீஸ்வரி தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 13 – ஆம் தேதியன்று வழக்கம்போல் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான முனியாண்டி வீட்டிலிருக்கும் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து முனியாண்டியின் தாயாரான பாக்கியம் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.