ரிக் வாகன இயந்திரத்தின் மூலம் குழந்தை சுர்ஜித்தை கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30 நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் மூன்று மீட்டர் தொலைவில் 100 அடிக்கு குழி தோண்டி சுரங்கம் அமைத்து 80 அடியில் உள்ள குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கிராமத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ரிக் வாகனம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் இது குறித்து பேசியுள்ளார். அதில், கடந்த 30 மணி நேரமாக குழந்தை சுஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளோம். ஆனால் இம்முறை ரிக் வாகனம் மூலம் கண்டிப்பாக குழந்தை சுஜித்தை மீட்டெடுப்போம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.