இந்தியா முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரும் பிரச்சினையாக கொரோனா தொற்று பரவல் லட்சக்கணக்கான உயிர்களை கொன்றது. இதனால் மத்திய அரசும் மாநில அரசும் இதை எதிர்ப்பதற்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டது. அதில் சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அவர்களுக்கு சிறப்பு காப்பீட்டு உதவி வழங்குவது குறித்து அறிவித்தது.
இதையடுத்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2020 மார்ச் 30ஆம் தேதியன்று நாட்டு மக்களுக்கு பல்வேறு பொருளாதார சலுகை அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா தொற்றை தடுக்க போராடும் சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 22.12 லட்சம் பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு 90 நாட்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் தற்போது நீடித்துக் கொண்டே இருப்பதனால் சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு உதவி 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,356 கோரிக்கைகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிப்பதால் நோய் பரவி உயிரிழப்பு ஏற்படும் என்று அறிந்தும் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பணியாளர்களுக்கு இந்த எந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெறுவதாக இருந்தாலும் எந்தவித தடையும் இல்லாமல் கல்யாண் திட்டத்தின்கீழ் காப்பீடு உதவி வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.