பூச்சி மருந்தை குடித்து பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துரும்பூர் ஊராட்சி கீழ தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் எம்.பி.ஏ. பட்டதாரியாக இருந்தார். இவர் படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்ததால் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தினசரி குடித்துவிட்டு தனது தாய்-தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கலியபெருமாள் கடந்த 19-ம் தேதி மதுபோதையில் இருந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துள்ளார்
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கலியபெருமாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக கலியபெருமாள் பாண்டிச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.