கோடை காலத்தில் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி ஆரம்பிக்க உள்ளது
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்குகிறது. கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.
இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து அனல் காற்று வீசும். கொரோனா பரவலை தடுக்க கடைபிடிக்கும் ஊரடங்கால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் பொது மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அதே நேரத்தில் வீடுகளில் மின் விசிறிகள் குளிரூட்டி உள்ளிட்ட மின் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளதால் அப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.