நத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருளி வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும். நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன.
ஒரு வகை நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளை இன்னொரு வகை நத்தைகள் பூக்களினால் (செவுள்களினால்) சுவாசிக்கின்றன. நத்தைகள் ஈரப்பதமுள்ள உடலின் மூலமாக மிக கடினமான இடங்களிலும் எளிதாக செல்லும் திறன் உடையவை. ஆபத்து காலங்களில் உடலை உள் இழுத்துக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும். இதில் சில நத்தையினங்கள் 3 வருடங்கள் வரை தூங்கும் ஆற்றல் கொண்டவை. இது Summer Sleep என்று அழைக்கப்படுகின்றது.
எதற்காக இப்படித் தூங்குகிறது என்றால் கோடை காலங்களில் வெப்பத்திலிருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ளவே ஆகும். இவற்றிற்கு இரவில் கேட்கும் திறன் கிடையாது. சில சென்டி மீட்டர் மட்டுமே வளரும் திறன் கொண்ட இந்த நத்தை தன்னுடைய உடல் எடையை விட பத்து மடங்கு பெரிய பொருட்களை தூக்கிச்செல்லும் செல்லும் ஆற்றல் கொண்டவை.