பிரபல அமேசான் நிறுவனம் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.
பிரபல அமேசான் நிறுவனம் இந்தியாவில் கோடைகால விடுமுறையை முன்னிட்டு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த தள்ளுபடி அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விற்பனையை முன்னிட்டு கோடக் பேங்க், ஆர்.பி.எல் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் போன்றவைகள் இணைந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும், EMI வழங்க இருக்கிறது. இதனையடுத்து அமேசான் நிறுவனம் தன்னுடைய பொருள்களுக்கு வழங்க இருக்கும் தள்ளுபடி குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசி : இந்த பொருட்களுக்கு 40 முதல் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. அதன்பிறகு Samsung, LG, Oneplus போன்ற டிவி பிராண்டுகளுக்கு 50% தள்ளுபடி வழங்குகிறது. இதனுடன் விலையில்லா EMI, installation மற்றும் சிறந்த டெலிவரியும் வழங்கப்படுகிறது.
ஃபயர் டிவி, கின்டெல் மற்றும் அலெக்சா: கிண்டல் சாதனங்களுக்கு 3,400 ரூபாய் தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவிகளுக்கு 48% தள்ளுபடியும், அலெக்சா ஸ்மார்ட் ஹோம் பொருட்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் சமையலறை பொருட்கள்: lighting பொருட்களுக்கு 50% தள்ளுபடியும், Air cooler மற்றும் water purifier 50% தள்ளுபடியும், சமையல் பாத்திரங்கள் மற்றும் எரிவாயு அடுப்புக்கு 50% தள்ளுபடியும், மெத்தை, கட்டில், மரச்சாமான்கள், coolers, Fans போன்றவைகளுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்.
செல்போன் மற்றும் லேப்டாப்: Intel மற்றும் Gaming லேப்டாப்களுக்கு 40% தள்ளுபடியும், செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 40% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனையடுத்து screen product, charger, போன் கேஸ், headset, Power Bank போன்ற பொருள்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்பிறகு Apple, oppo, redmi, realme, haiku, Samsung, oneplus போன்ற பிராண்டுகளுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஆடைகள், ஃபேஷன், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவைகளுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படும்.