கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது. வெயிலில் சென்றால் கருத்து விடுவோம் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படி வெயிலில் சென்றால் நம் உடம்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பதை அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்வோம். வெயிலில் சுற்றினாலோ அல்லது வெயிலில் நின்று வேலை பார்த்தாலோ நாம் கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாகி விடுவோம் என்று அனைவருக்கும் தெரியும்.
வெயிலில் நிற்கும் பொழுது எதற்காக கருப்பாகிறார்கள் என்றால் நமது உடம்பில் உள்ள செல்லானது மெலனியம் என்ற ஒன்றை உருவாக்கும். நாம் வெயிலில் சுற்றும் பொழுது சூரியனிலிருந்து வரக்கூடிய யுவி கதிர்வீச்சுகள் நமது தோல்களின் மீது படும் பொழுது மெலனியம் பாதிக்கப்பட்டு தீர்ந்து விடுகிறது. இதனால் நமது உடம்பு மெலனியத்தை அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். இந்த மெலனியம் அதிகளவில் சுரக்க ஆரம்பிப்பதால், நமது தோல்கள் கருப்பாகிவிடும். பலர் எவ்வளவுதான் வெயிலில் சுற்றினாலும் கருப்பாக மாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோல்களில் மெலனியம் சுரக்கும். அப்படி மெலனியம் அதிகம் சுரக்கும் நபர்கள் கருப்பாகி விடுவார்களாம். மெலனியம் அதிகம் சுரக்காத நபர்கள் அவ்வளவு எளிதில் கருப்பாகி விடமாட்டார்கள். இதுதான் அறிவியல் காரணமாக கூறப்படுகின்றது.