விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அரசியல் செய்கிறதா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் 2 சிங்கிள் ட்ராக் பாடல்களும் செம ஹிட் கொடுத்தது.
இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் மார்ச் 25ஆம் தேதி ஆடியோ லாஞ்ச் நடைபெற இருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றதால் சன் பிக்சர்ஸ் பீஸ்ட் ஆடியோ லாஞ்சை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது இப்படத்தின் டிரைலர், போஸ்டர், ப்ரமோ எதுவும் வெளியிடாமல் அமைதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் ப்ரமோஷன்களில் வேளைகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டாமல் இருப்பது உதயநிதி ஸ்டாலினுக்காக விஜய்யை இருட்டடிப்பு செய்வதற்காக தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.