Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியை முந்திய சன் டிவி…. வெளியான டி.ஆர்.பி பட்டியல்…!!!

கடந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியலில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சேனல்கள் பல தங்களது சேனலை டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீரியல்களில் புதிய புதிய மாற்றங்களையும், புதிதாக பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் சன் டிவியில் ஒளிபரப்பான விஜயின் பிகில் திரைப்படம் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், சன்டிவியின் முக்கிய சீரியல்களான ரோஜா மற்றும் வானத்தைப் போல சிரியல்கள் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளது. அதன்பின் மற்றொரு தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜயின் பாரதிகண்ணம்மா சீரியல் நான்காவது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.

Categories

Tech |