சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர்.
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. இதனைத் தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரமோ ரசிகர்களின் மனதில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.