சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியலில் நடிகை நளினி அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர் கதைகளில் ஒன்று ரோஜா. இது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும் இந்த சீரியலானது பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேலும் இதில் சிப்பு சூர்யன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நல்காரி நடிக்கிறார்.
இதனை தொடர்ந்து வடிவுக்கரசி, ராஜேஷ், ஷர்மிளா போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் ரோஜா சீரியலில் நடிகை நளினி அவர்கள் அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒளிப்பரப்பாக உள்ள எபிசோட்டில் நளினி சிறப்பு விருந்தினராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.