சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் புதிதாக நடிகர்கள் வர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் வரிசையில் ரோஜா தொடரும் ஒன்று. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனை அடுத்து பல வாரங்களாக பார்க் இந்தியா நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ரோஜா தொடர் சற்று பின்னடைவில் உள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூரியன் மற்றும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்து வருகிறார். இந்த நிலையில் ரோஜா தொடரில் புதிதாக திருமதி செல்வத்தில் நடித்துள்ள கௌதமி வேம்பு நாதன் அறிமுகமாக உள்ளார். மேலும் நாதஸ்வர தொடரில் நடித்த ஜெயந்தியும் புதிதாக வர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.