டிஆர்பியை மேலும் உயர்த்த சன் டிவி புதிய திட்டம் தீட்டியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சன் டிவி டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இதனை மேலும் மெருகூட்டும் வகையில் டிஆர்பியை உயர்த்த சன் டிவி புதிய திட்டம் தீட்டியுள்ளது.
அதன்படி, அட்லீ இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்த ‘பிகில்’ திரைப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6;30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதன் மூலம் சன் டிவி இந்த வாரம் டிஆர்பியில் உச்சத்திற்கு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.