திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் குட்டப்பாளையத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரஸின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு, பால் உற்பத்தி பெறுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய இனங்களை பாதுகாக்கும் முயற்சிகளை பாரம்பரிய மாடுகள் மட்டுமின்றி மரங்கள், காய்கறிகள் வகைகள் இவற்றை ஊக்கப்படுத்த வேண்டும் .வெளிநாடுகளில் இருந்து தான் எல்லா யோசனைகள் வருகிறது என்ற அந்த எண்ணமே தவறு. நமது பாரம்பரியமான எண்ணங்களை எல்லாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். அதனை தொடர்ந்து பொருளாதார பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, பொருளாதாரம் அது எனக்கு தெரியாது என நகைச்சுவையாக தெரிவித்தார். அமெரிக்காவில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி விதங்களை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைவாக உயர்த்துவதால் 100 பில்லியன் டாலர் அண்ணிய செலவாணியே ரிசர்வ் வங்கி விற்று உள்ளதை என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், இது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நான்கு விகிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வளர்ச்சி குறையும், ஜிடிபி 6.5க்கு வராது. இந்தியாவின் வளர்ச்சி 6.5 என உலக வங்கி கூறிய பிறகு அதை அரை மனதோடு மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. 6.5 வருவதும் ரொம்ப கடினம். வளர்ச்சி குறைந்து விலைவாசி உயரும். அதை ரிசர்வ் வங்கி கவர்னரும் ஒப்புக்கொள்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஒப்புக் கொள்கிறார்கள். இதனையடுத்து சென்னை வந்திருந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கியதாய் குறித்து பிரசிதமான கலாய்த்து பேசியுள்ளார். அதாவது, சென்னை மயிலாப்பூரில் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் இதற்கெல்லாம் தீர்வாகாது. ஜப்பான் நாட்டுடன் செய்து ஒப்பந்தப்படி டாலருக்கு நிகரான நமது ரூபாயை நிலையாக வைத்துக் கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாலரை கையிருப்பில் சீராக வைத்துக் கொள்ள ஸ்வாப் செய்யும் அளவுக்கு செய்ய வேண்டிய இல்லை. தற்போது கூட ரிசர்வ் வங்கி 500 பில்லியன் டாலர் அளவிற்கு கையிருப்பு உள்ளது. ஆனால் கரன்சி ஸ்வாப் அளவுக்கு நாம் தள்ளப்பட மாட்டோம் என்று நம்புவதாக தெரிவித்தார்.