அருணாச்சலம் படத்தின் ஒரு காட்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் 1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் வெளியான அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு, அருணாச்சலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.
இதனையடுத்து, பல வருடங்களுக்குப் பிறகு தீபாவளி சிறப்பு திரைப்படமாக நடிகர் ரஜினி நடித்த ”அருணாச்சலம்” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக தொலைக்காட்சியில் பார்த்தனர். இதனையடுத்து, இந்த படத்தின் ஒரு காட்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
How Many Of U Noticed?
Director Sundar.C Acted a Reporter Role In Arunachalam 🖤 #Jailer @khushsundar pic.twitter.com/QDZPAuYYYA— 🤘Rajini Fans Team ✴️ (@RajiniFansTeam1) October 25, 2022
அதன்படி, அருணாச்சலம் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் சுந்தர். சி ரஜினியை பேட்டி எடுப்பவராக நடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘அட இத்தனை நாள் இதனை கவனிக்கவில்லையே’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.