சுந்தர் சி நடிப்பில் வெளிவரவிருக்கும் பட்டாம்பூச்சி திரைப்படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வீராப்பு, தில்லுமுல்லு போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பத்ரி. தற்போது இவர் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் ஜெய் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’. அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சுந்தர் சி காவல்துறையினராகவும், ஜெய் சைக்கோ வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். சைக்கோ திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு நவ்நீத் இசையமைத்து இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் பட்டாம்பூச்சி திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.