Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் சுந்தர் சி…. பூரண குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்…!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சுந்தர் சி பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனரும், நடிகரும், பிரபல நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் தன்னை ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொண்ட பின் குடும்பத்தினரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |