Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய மணி செயோன் இயக்க உள்ளார்.

படக்குழுவினர்

மேலும் பெயரிடப்படாத இப்படத்தை வீ.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்க உள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். க்ரைம் ட்ராமாவாக உருவாக்க உள்ள இப்படத்தில் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Categories

Tech |