கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை 1972 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மதுரையில் பிறந்தார் சுந்தர் பிச்சை. மதுரையில் பிறந்தாலும் வளர்ந்தது முழுவதும் சென்னையில் தான். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த சுந்தர் பிச்சை பிளஸ் 1 பிளஸ் 2 ஆகிய வகுப்புகளை சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் முடித்தார் சுந்தர் பிச்சை. பிறகு மேல் படிப்பிற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள கரம்பூர் ஐஐடியில் உலோக பிரிவில் பி.டெக் பட்டம் முடித்தார்.
பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மற்றும் பென்சில்வேனியாவில் இருந்த பல்கலைக்கழகம் ஒன்றில் எம்பிஏ என உயர் கல்வியை முடிந்தார். சிறிது காலம் அமெரிக்காவில் உள்ள மிக்ஸிங் நிறுவனத்தில் மேலாண்மை கண்ஸல்ட்டண்டாக வேலை பார்த்தார் சுந்தர் பிச்சை. பிறகு கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்களில் இவரின் வேலையை பார்த்து கூகுள் நிறுவனம் இவருக்கு வைஸ் பிரசிடெண்ட் பதவியை கொடுத்தது.
கூகுள் நிறுவனத்திற்கு என்று தனியாக பிரவுசருக்கு ஏதுமில்லை என ஒரு நிர்வாகக் கூட்டத்தில் பேசினார் சுந்தர் பிச்சை. அதை நாமே உருவாக்கலாம் என்றும் சொன்னார். அங்கிருந்த சில சீனியர் அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கூகுள் நிறுவனத்தின் சிஇஓ எரிக் ஸ்மித் அதற்கு அதிக செலவு வரும் என சொல்லிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சிறிது நாட்கள் கழித்து நிர்வாக கூட்டம் ஒன்று நடந்தது அப்போது கூகுள் குரோமின் முக்கியத்துவத்தை பேசினார் சுந்தர் பிச்சை. அதை கவனமாக கேட்க எரிக் ஸ்மித் நீங்கள் உலகத்திற்கு அறிவியுங்கள் கூகுள் குரோமை பற்றி என தேதியும் அறிவிப்பு செய்தார். பிறகு அதன் வேலையைத் துவக்கியது. 2008 ஆம் ஆண்டு உலக சந்தைக்கு கூகுள் நிறுவனம் தன்னுடைய குரோம் பிரவுசரை வெளியிட்டது. வெளியிட்ட சில மாதங்களிலேயே கூகுள் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டிக் கொடுத்தது கூகுள் குரோம். இதை தொடர்ந்து சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பும் கொடுக்கப்பட்டது. கூகுளின் ஆண்ட்ராய்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்த அன்டி ரூபன் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பதவியிலிருந்து விலகிய போது ஆண்ட்ராய்ட் பிரிவிற்கும் சேர்த்து தலைவராக சுந்தர் பிச்சையின் நியமனம் செய்யப்பட்டார்.