Categories
உலக செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் 5 வருட சம்பளம் எவ்வளவு..? வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின், CEO வாக பணியாற்றும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது.  

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள கூகுள் தலைமை மற்றும் அதன் முதன்மை நிறுவனமான ஆல்பபெட்டினுக்கும் சுந்தர் பிச்சை தான் CEO ஆக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில் அதிகமாக சம்பளம் வாங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் CEO க்கள் சம்பள பட்டியலானது, நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

அதில் 4.17 லட்சம் கோடி ரூபாய் முகநூல் நிறுவனரான, மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுந்தர் பிச்சையின் சம்பளம் 80,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து 2020 வரை இழப்பீடுகள், பணம் மற்றும் பங்குகள் போன்றவற்றிற்கு மொத்தமாக வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அவருக்கு எளிதாக இந்த வாழ்க்கை கிடைத்துவிடவில்லை. ஏழ்மையான குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியில் தான் படித்திருக்கிறார். அதன் பின்பே கூகுள் நிறுவனத்தில் சாதாரண பணியில் சேர்ந்துள்ளார். அங்கு பிறரை போல் அல்லாமல் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி முன்னேறியிருக்கிறார்.

Categories

Tech |