திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி இடிந்து விழுந்தது.
திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் இயங்கி வரும் ANM என்ற அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பக்கவாட்டு சுவர்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் நனைந்து பழுதடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு அந்த பள்ளியின் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே இடித்து புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனவும் அதை அரசு ஏற்று நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.