கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.
தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி இருந்தது அதில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்துள்ளது.
தனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவாக கிடைக்க வேண்டும். கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான். தனியுரிமை தனித்துவமானது. இதனால் நிறுவனங்கள் அனைத்தும் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும் என்றும், கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சுந்தர் பிச்சை தெரிவிக்கையில், இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்று சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.