Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி…. வழக்கு ஒத்திவைப்பு…. முதல்-அமைச்சருக்கு நன்றி….!!

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த காரணத்தினால் 14 நபர்கள் மீது காவல்துறையினர் ‌வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அவர்கள் அங்கிருந்த சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 14 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் தற்போது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணை உளுந்தூர்பேட்டையில் இருக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. அதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட 12 பேர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். மீதமிருக்கும் இரண்டு நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சண்முகசுந்தரம் அடுத்த விசாரணையை விழுப்புரத்தில் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்பின் கோர்ட்டில் இருந்து வெளி வந்த வேல்முருகன் எம்.எல்.ஏ நிபுணர்களிடம் கூறியதாவது, இந்த வழக்கை சட்டப்படி சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன் எனவும், எந்த காரணத்திற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடங்கியதோ அதற்கு ஏற்றவாறு எனது கோரிக்கைகள் அனைத்தும் தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூலமாக ஒவ்வொன்றாக நிறைவேற்றபட்டு  வருகின்றது. பின்னர் தமிழர் வேலை தமிழருக்கே என்பது உள்பட அனைத்து கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |