கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்ற முடிந்த நிலையில், தேர்வு எழுதிய பெண் ஒருவர் தன்னுடைய ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இருந்துள்ளது. அந்தப் பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஒரு நடிகையின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தேர்வு குழுவினர் விசாரணை நடத்திய போது சம்பந்தப்பட்ட பெண் சிக்கமகளூரு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இந்த பெண்ணுக்கு தேர்வு எழுதும் மையம் சிமோகாவில் இருந்து தான் காரணமாக தன்னுடைய கணவரின் நண்பர் மூலம் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
அப்போது தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக சன்னி லியோனின் புகைப்படத்தை தவறுதலாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் அடங்கிய ஹால் டிக்கெட் தற்போது வலை தளத்தில் வைரலாகி வருகிறது.