Categories
தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு… “தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை”… சன்னி வக்பு வாரியம்.!!

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிப்பதாகவும் ஆனால் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும் சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது..

அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சன்னி வக்பு வாரியம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஜபர்யாப் ஜிலானி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால், எங்களுக்கு அதில் திருப்தியில்லை. தீர்பப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

Categories

Tech |