பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணி கேப்டன் புவனேஸ்வர் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19. 5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கே.எல் ராகுல் 71* (53) ரன்கள் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார். மேலும் மயங்க் அகர்வால் 55 (43)ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது.
இந்நிலையில் தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர் குமார் “எங்களது பவுலர்கள் மிக சிறப்பாக பந்து வீசினர். ஆனாலும் எங்களுக்கு பந்து வீச்சில் சில முன்னேற்றம் தேவை. நாங்கள் நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் குறைவாக எடுத்து விட்டோம். இருந்தாலும் நாங்கள் மன உறுதியுடன் நம்பிக்கையாக கடைசி வரை போராடினோம் ஆனால் வெற்றி பெற முடியவில்லை என்று கூறினார்.