சூப்பர் 10 கிரிக்கெட் லீக் டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்க உள்ளது.
முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இணைந்து சூப்பர் 10 என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தார்கள். இந்த போட்டியில் திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்ப்பார்கள். இந்த வருட டிசம்பர் மாதம் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கின்றது.
இது குறித்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளதாவது, உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த போட்டி டி10 வடிவில் அமைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கும் என்பது உறுதி. டிசம்பர் எப்போது வரும் என ஆவலாக இருக்கின்றேன் என கூறியுள்ளார்.
இது குறித்து நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளதாவது, கிரிக்கெட் என்பது திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் இருக்கும் நண்பர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் இருக்கும் மற்றொரு பக்கத்தை காட்ட வாய்ப்பாக இருக்கும். இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும் என கூறியிருக்கின்றார்.