சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த பகுதிகளில் புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயணிகள் விரைவில் அடையலாம்.
அதோடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பேருந்து நிலையமானது திறக்கப்பட்டு விடும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பயணிகளின் கூட்டம் நெரிசல் பெருமளவில் குறைந்து விடும் என்பதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து எதிர்பார்ப்பு பலரிடமும் அதிக அளவில் இருக்கிறது.